Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டுதார்கள் இது சம்மந்தமா புகார் கொடுக்கணுமா?…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

நாடு முழுதும் உள்ள ரேஷன் கடைகள் வாயிலாக பயனர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அரிசி, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பல கோடிக் கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதனிடையில் இந்தியாவில் கொரோனா தொற்று காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் பிஎம் கரிப் கல்யாண் யோஜனா எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் ரேஷன்கார்டு பயனாளர்கள் தங்களுக்கு தேவையான உணவை இலவசமாக பெற்று பயன்பெறலாம். தற்போது மத்திய அரசின் இந்த இலவச உணவுத்திட்டத்தின் கீழ் உணவு கிடைக்கவில்லை என சிலர் தொடர்ந்து புகாரளித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் நீங்கள் கரிப் கல்யாண் திட்டத்துக்கு தகுதியுடையவராக இருந்து இதன் பலனை பெறவில்லை எனில் ஆன்லைன் வாயிலாக புகார் அளிக்க முடியும். அந்த வகையில் [email protected] என்ற இணையதளம் மற்றும்  [email protected] மின்னஞ்சல் முகவரி வாயிலாக இது தொடர்பாக பயனர்கள் புகார் அளிக்கலாம்.

அத்துடன் 1967 அல்லது 1800 425 5901 என்ற டோல்ஃப்ரீ எண்ணை தொடர்புகொண்டும் உங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் 04325665566, 04428592828 என்ற கட்டணம் இல்லா சேவைகளின் வாயிலாகவும் புகார் தெரிவிக்கமுடியும். இல்லையென்றால் பயனர்கள் ரேஷன்கார்டு எண்ணுடன் புகார் தொடர்பான கடிதத்தை எழுதி, ரேஷன் டிப்போவின் பெயரை குறிப்பிட்டு அதை அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |