ரேஷன் கடைகளில் திருட்டை தடுக்கவும், பயனாளர்களுக்கு உரியப்பொருட்கள் குறைந்த விலையில் கொண்டு சேர்ப்பதை உறுதிசெய்யவும் தமிழ்நாடு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுதும் பயோ மெட்ரிக் வாயிலாக ரேஷன் பொருட்கள் வழங்குவதை உறுதிசெய்யும் தமிழக அரசு, விரைவில் புது மைல் கல்லை எட்டயிருக்கிறது. அதன்படி, நியாயவிலை கடைகளுக்கு ரேஷன்கார்டை எடுத்துபோக தேவை இல்லை என்ற நிலை விரைவில் வரயிருக்கிறது. ஏனெனில் உங்களது கண்களை காண்பித்தால் போதும் பொருட்களை வாங்கிச்செல்லலாம்.
இதுகுறித்து தமிழக உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது, கருவிழி ஸ்கேனர் வாயிலாக ஸ்கேன் செய்து ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் விரைவில் மாநிலம் முழுதும் விரிவுபடுத்தப்பட இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் 98.3 சதவிகிதம் பேர் பயோமெட்ரிக் முறையில் பொருட்களை வாங்கி வருகின்றனர். திருவல்லிக்கேணி , அரியலூர் மாவட்டங்களில் சோதனைமுறையில் கருவிழி ஸ்கேனர் வாயிலாக பொருட்கள் விநியோகிக்கபட்டு வருகிறது.
கூடியவிரைவில் தமிழகம் முழுதும் செயல்படுத்த முதல்வரிடம் பரிந்துரைக்கப்படும். அதேபோன்று ஜனவரி மாதம் முதல் தர்மபுரி, நீலகிரி ஆகிய 2 மாவட்டங்களில் சிறு தானியங்கள் சோதனை முறையில் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யபடவுள்ளது. பொதுமக்களின் வரவேற்பை பொருத்து பிற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும். கிடங்குகளில் இருந்து அரிசி கடத்தலை தடுக்க 2886 கேமராக்கள் பொறுத்த டெண்டர் கோரபட்டு உள்ளது. அதேபோன்று பொருட்களை கொண்டுச்செல்லும் லாரிகளில் ஜிபிஎஸ் பொறுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நேரடியாக அரவை ஆலைகளுக்கு எடுத்து சென்று பிறகு, அவை உணவு தானியகிடங்குகளில் கொண்டு சேர்க்கும் அடிப்படையில் டெண்டர் விடுவதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது” என அவர் தெரிவித்தார்.