நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் அட்டை மூலமாக ரேஷன் கடைகளில் இருந்து இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் அரசின் நிதி உதவி போன்ற நலத்திட்ட உதவிகள் அனைத்தையும் பெறுவதற்கு ரேஷன் கார்டு என்பது மிக அவசியம். இந்நிலையில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகி உள்ளது. அதாவது ரேஷன் கார்டு தொடர்பான விதிமுறைகளில் தற்போது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
உணவு மற்றும் பொது விநியோகத் துறை வெளியிட்டுள்ள செய்தியில், ஆடு முழுவதும் உள்ள நுகர்வோருக்கு இலவச ரேஷன் வசதி வழங்கப்பட்டு வரும் நிலையில் தகுதியான குடிமக்களுக்கான அளவுகோல்களை மாற்றுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. தற்போது புதிய தரநிலைக் காலம் வரைவு கிட்டத்தட்ட தயாராகியுள்ளது. நாடு முழுவதும் 80 கோடி மக்கள் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் பலனை பெற்று வருகிறார்கள். ஆனால் முறைகேடுகள் நடக்காமல் இருப்பதற்கு தற்போது புதிய விதிமுறைகள் கொண்டு வரப்படுகிறது.
பயனாளிகள் அனைவரும் ஒரே மாதிரியாக பயன்பெறும் வகையிலும் மோசடி நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் வகையிலும் புதிய விதிமுறைகள் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய விதிமுறைகளின் கீழ் தகுதியான குடிமக்கள் மட்டுமே அரசியல் ரேஷன் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் தகுதியற்ற நபர்களுக்கு இனி ரேஷன் உதவிகள் கிடைக்காது எனவும் கூறப்படுகிறது. இந்த புதிய விதிமுறைகள் விரைவில் உறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும் என கூறப்படுகிறது.