Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டு விண்ணப்பிக்க போறீங்களா….? இதெல்லாம் கட்டாயம் கொண்டு போங்க…!!!

இந்திய குடிமக்களுக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது குடும்ப அட்டை. இது முக்கிய ஆவணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக மலிவான விலையில் கடையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் சாதாரண மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். மேலும் அரசு தரப்பிலிருந்து பல்வேறு நிதி உதவிகள் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. எனவே ரேஷன் கார்டு வைத்திருப்பது ரொம்ப முக்கியம். இந்நிலையில் ரேஷன் அட்டை வாங்க விண்ணப்பிப்பதற்கு முன்பாக சில விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

முதலில் விண்ணப்பிப்பதற்கு எந்த மாநிலமோ அந்த மாநிலத்தின் வலைதள பக்கத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தமிழக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க என்றால் https://tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இதில் வறுமை கோட்டிற்கு கீழே வாழும் மக்களுக்கு ஒரு ரேஷன் கார்டு, வறுமைக் கோட்டிற்கு மேலே வாழ்பவர்களுக்கு ஒரு ரேஷன் கார்டு இதில் ஏதாவது ஒரு பிரிவில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் போது கேட்கும் தகவல்களை மிக சரியாக கொடுக்க வேண்டும். ரேஷன் கார்டு விண்ணப்பிக்க ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, பணியாளர் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்கள் தேவைப்படும். எனவே இவற்றை மறக்காமல் கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும்.

Categories

Tech |