Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…. உடனே இத செய்யுங்க….!!!

குடும்ப அட்டையில் குடும்பத்தில் இருப்பவர்களின் பெயர்கள் அனைத்து இருக்க வேண்டும்.

இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் நியாயவிலைக் கடைகளின் மூலமாக மக்களுக்கு மலிவு விலையில் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மலிவு விலை பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டுமானால், அதற்கு கண்டிப்பாக ரேஷன் கார்டு வேண்டும். இந்த குடும்ப அட்டையின் மூலமாக தான் தமிழக அரசின் பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகள் மக்களை வந்தடைகிறது. இந்நிலையில் குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அது தொடர்பான செய்திகளை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நியாயவிலைக் கடைகளில் பொருட்களை தங்குதடையின்றி பெற்றுக் கொள்ளலாம்.

அதாவது ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் வந்த பிறகு குடும்ப அட்டையில் பல்வேறு விதமான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே குடும்ப அட்டை பற்றிய தகவல்களில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். அதன்பிறகு குடும்பத்தில் ஒருவர் புதிதாக இணைந்தால் முதலில் அவருடைய ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும். இதில் ஒரு பெண் உறுப்பினர் இணைந்தால் அவரின் கணவரின் பெயரை அப்டேட் செய்ய வேண்டும். அதன்பிறகு ஒரு குழந்தை பிறந்தால் கண்டிப்பாக தந்தையின் பெயர் தேவை. இதனையடுத்து முகவரியை மாற்றிக் கொள்ள வேண்டும். இதை மாநிலத்தில் இருக்கும் உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று மாற்றிக்கொள்ளலாம்.

இதைத் தொடர்ந்து நீங்கள் புதிதாக திருமணமானவராக இருந்தாலும், குடும்பத்தில் வேறு எதுவும் புதிய நபர்கள் இணைந்தாலும் அவர்களின் பெயர்களை கண்டிப்பாக குடும்ப அட்டையில் இணைக்க வேண்டும். இதில் குழந்தையின் பெயரை சேர்க்க வேண்டும் என்றால், குழந்தைக்கு முதலில் ஆதார் அட்டை எடுக்க வேண்டும். அதன்பின் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டையை வைத்து குடும்ப அட்டையில் குழந்தையின் பெயரை இணைத்துக் கொள்ளலாம். மேலும் குடும்ப அட்டையில் புதிதாக இணைந்துள்ள நபர்களின் பெயர்களை இணைக்காவிட்டால் உங்களுக்குத்தான் இழப்பு நேரிடும்.

Categories

Tech |