Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஷாக் நியூஸ்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் நியாய விலை கடைகளின் மூலம் பொது மக்களுக்கு மலிவு விலையில் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படுகிறது. இந்த பொருட்களை பெற வேண்டும் என்றால் அதற்கு கண்டிப்பாக குடும்ப அட்டை தேவை. இந்த குடும்ப அட்டையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விதமான திருத்தங்களை கொண்டு வருகிறது. அந்த வகையில் தகுதியற்ற நபர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கக் கூடாது எனவும், ஒருவேளை தகுதியற்ற நபர்கள் ரேஷன் கார்டு வைத்திருந்தால் உடனடியாக அதை ரத்து செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் தற்போது உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது  தகுதி இல்லாதவர்களின் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படுவதோடு, குடும்ப அட்டைகளை பெறுவதற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு குடும்ப அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நியாய விலை கடைகளில் உள்ள மலிவு விலை பொருட்களை ஏழைகள் மட்டுமே பெற்று பயன்பெறாலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த 2011-ம் ஆண்டை ஒப்பிடும்போது தற்போது மக்கள்தொகை பன்மடங்கு அதிகரித்துள்ளதால் குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்,  தகுதியில்லாதவர்களுக்கு குடும்ப அட்டைகளை ரத்து செய்யும் திட்டம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

Categories

Tech |