ரேஷன் கார்டு ஆன்லைன் மூலமாக பெறுவதற்கான வழிமுறைகள் பற்றி அறிந்து கொள்வோம்.
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதரர்களுக்கும் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருவதால் அனைத்து குடும்பத்தினரும் ரேஷன் கார்டை பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அதனால் ரேஷன் கார்டில் விண்ணப்பிக்கும் நபர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து மூன்று நாட்களில் பெற முடியும். இதற்கு முதலாவதாக https://tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இதில் மின்னணு அட்டை சேவைகள் என்பதன் கீழ் “புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க” என்பதனை அழுத்தவேண்டும். அடுத்ததாக “name of family head” என்பதிலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் சரியாக பெயரை உள்ளிட வேண்டும். அதன் பிறகு இதில் கேட்கப்பட்டுள்ள மற்ற விவரங்களை சரியாக நிரப்ப வேண்டும். அதாவது முகவரி, மாவட்டம், தாலுகா, கிராம், அஞ்சல் குறியீடு மற்றும் முகவரி மொபைல் எண் மின்னஞ்சல் முகவரி போன்றவை சரியாக நிரப்பப்பட வேண்டும்.
ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் மற்றும் வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. விண்ணப்பத்தில் குடும்ப தலைவருக்கான போட்டோ என்பதில் 5 எம்பி கொண்ட போட்டோவை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
2. இதையடுத்து அட்டை தேர்வு என்பதில் தங்களுக்கு தேவையான அட்டையை தேர்வு செய்ய வேண்டும்
3. அடுத்ததாக இருப்பிட சான்று என்பதில் ஏதேனும் முகவரி சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதாவது கேஸ் பில், டெலிபோன் பில், தண்ணீர் பில் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
4. தற்போது உறுப்பினர் சேர்க்கை என்பதில் குடும்ப தலைவர் பெயரை முதலில் கொடுக்க வேண்டும். இதையடுத்து உறுப்பினர் சேர்க்கை சேமி என்பதை அழுத்த வேண்டும்.
5. இதையடுத்து எரிவாயு இணைப்பு பற்றிய விவரங்களை நிரப்ப வேண்டும்.
6. அடுத்ததாக ‘உறுதி செய்’ என்பதை கிளிக் செய்த பின்பு தங்களின் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு 3 நாட்களுக்குள் அப்ரூவல் பெற முடியும். அத்துடன் 15 நாட்களுக்குள் ரேஷன் கார்டை விண்ணப்பத்தார்கள் பெற முடியும்.