ரேஷன் அட்டை வாயிலாக அரசிடமிருந்து இலவச ரேஷன் வாங்குபவர்களுக்கு புது அப்டேட் வந்திருக்கிறது. அதாவது, உத்தரப்பிரதேசத்தில் இந்த மாதத்திற்கான ரேஷன் விநியோகமானது நவம்பர் 15ம் தேதிக்குள் செய்யப்படும். எனினும் பல ஊடகச் செய்திகளின் அடிப்படையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்திய உணவுக்கழகம் இன்னும் அரிசி வழங்கவில்லை. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஏராளமான ரேஷன் ஒதுக்கீட்டு கடைகளுக்கு இம்முறை கோதுமை, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் மற்றும் உப்பு மட்டுமே சென்றடைய முடிந்தது.
இதனிடையில் அரிசிமட்டும் இக்கடைகளுக்கு சென்றடையவில்லை என்பதால் ரேஷன் பெறுபவர்கள் இங்கு சற்று காத்திருக்கவேண்டும். இருப்பினும் கூடியவிரைவில் ரேஷன் கடைகளுக்கு அரிசி வந்துவிடும் என்று அதிகாரிகள் கூறினர். அதனை தொடர்ந்து ரேஷன் விநியோகம் செய்யும் பணி வழக்கம்போல தொடங்கும். இதற்கிடையில் உண்மையில் ரேஷன்கடைகளில் அரிசி ஒதுக்கீடு செய்யப்படாததால் பாயின்ட் ஆப் சேல்ஸ் மெஷின் ரேஷன் விநியோகத்தை அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக ரேஷன் அட்டைதாரர்கள் விரும்பாவிட்டாலும் காத்திருக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.