Categories
மாநில செய்திகள்

ரேஷன் பொருளால் அதிர்ச்சி…. சமைத்து சாப்பிட்ட 3 பேர் கவலைக்கிடம்…. பெரும் பரபரப்பு…..!!!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நொச்சியூர் என்ற பகுதியில் ரேஷன் கடையில் கடந்த புதன்கிழமை அரிசி மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரேஷனில் வழங்கப்பட்ட சமையல் எண்ணையில் உணவு சமைத்து சாப்பிட்ட ஒரு பெண் உட்பட 3 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ரேஷன் கடையில் வழங்கப்பட்ட சமையல் எண்ணெய் குறித்து பரிசோதிக்கப்பட்டது.

அதில் கடந்த டிசம்பரில் காலாவதியான சமையல் எண்ணெயை வழங்கியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் அச்சமடைந்த அப்பகுதியினர் தரமான உணவு பொருட்களை வழங்க மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |