இயக்குனர் கார்த்திக் நரேன் இணையத்தில் பதிவிட்ட பதிவுவொன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் கார்த்திக் நரேன். அண்மையில் இவர் இயக்கி தனுஷின் நடிப்பில் வெளியான திரைப்படம் மாறன். இத்திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். மேலும் இது ஓடிடியில் வெளியாகி சில விமர்சனங்களை பெற்று இருந்தது. இப்படம் குறித்த விவாதம் இணையத்தில் நடந்து வந்த நிலையில் கார்த்திக் நரேன் பதிவிட்ட ஒன்று சர்ச்சைக்குள்ளானது.
அவர் பதிவிட்டதாவது “ரைட்டு, உண்மையை அப்புறம் சொல்றேன்” என கூறியிருந்தார். இது பலரையும் குழப்பம் அடைய செய்தது. இதனால் பலரும் இப்படத்தில் தனுஷின் தலையீடு இருந்ததால் விமர்சனங்கள் எதிர்மறையானது என கூறி வந்தனர். பல விமர்சனங்களுக்குள்ளான பிறகு கார்த்திக் நரேன் அந்த பதிவை நீக்கினார். அவர் நீக்கியபோதிலும் ரசிகர்கள் உண்மையை சொல்லுங்கள் என்று கேட்டு வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.