Categories
உலக செய்திகள்

“ரொட்டி செய்ய தெரிஞ்சா போதும்!”…. இவ்ளோ சம்பளம்?…. மலேசியாவில் அரிய வாய்ப்பு….!!!!

மலேசியாவில் பெரும்பாலான மக்கள் அரிசி உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிட்டு வந்தனர். ஆனால் தற்போது மலேசிய மக்கள் ரொட்டியையும் விரும்பி உண்ண தொடங்கியுள்ளனர். இருப்பினும் ரொட்டி தயாரிப்பவர்களுக்கு மலேசியாவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மலேசியாவில் ரொட்டி தயாரிப்பாளர்களுக்கு 5,032 Ringgits வரை ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மலேசியாவில் ரொட்டி தயாரிப்பாளர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் கமருல் என்ற நபர் தனது உணவகத்தில் தானே ரொட்டி செய்வதாகவும், விடுமுறை நாட்களில் 700 முதல் 800 ரொட்டிகளும், சாதாரண நாட்களில் 500 ரொட்டிகளும் விற்பனையாவதாக கூறியுள்ளார். இந்த ரொட்டி விற்பனை அதிக லாபம் கொடுப்பதால் விரைவில் ரொட்டி விற்பனைக்கான அகாடமி திறக்கலாம் என்றும் கமருல் யோசனை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |