தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் இயக்குனர் ஷங்கர். இவர் தனது 2-வது மகள் அதிதி ஷங்கரை ‘விருமன்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக கார்த்தி நடித்துள்ளார். மேலும் இப்படத்தை முத்தையா இயக்கி, சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பானது மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து இயக்குநர் முத்தையா எழுதி இயக்கும் இப்படத்திற்கு ‘விருமன்’ எனவும் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி மற்றும் பல கதாபாத்திரங்கள் நடிக்கின்றார்கள். இந்நிலையில் கொம்பன் படத்தை போலவே இந்தப்படமும் கிராமத்து பின்னணியில் உருவாக்கப்பட்டு, உறவுகளின் கதையை சொல்லும் நல்ல குடும்ப படமாக உருவாகவுள்ளது. மேலும் இப்படத்திற்கு S.K.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்து, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இதையடுத்து பொதுவாகவே இயக்குநர் முத்தையா படங்களில் பெண் கதாப்பாத்திரங்கள் மிகவும் அழுத்தமிக்க, வீரம் கொண்ட கதாபாத்திரமாக இருக்கும். அதனை போல், அதிதி ஷங்கர் தனது முதல் படத்திலேயே கனமான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இப்போது இருந்தே இந்தப்படத்தில் அதிதியின் கதாபாத்திரம் பற்றி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ‘கொரோனா குமார்’ என்ற படத்தில் அதிதி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்பு நடிக்கவுள்ளார். இதையடுத்து கெளதம் மேனன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளார். இவ்வாறு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.