Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

ரொமான்டிக்காக கொண்டாடிய ஹோலி… “உடனே காரை விற்ற பிரியங்கா சோப்ரா”… எதற்காக தெரியுமா…???

பிரியங்கா சோப்ரா தனக்கு மிகவும் பிடித்தமான காரை திடீரென விற்றுள்ளார்.

பிரபல பாலிவுட் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். பிரியங்கா சோப்ரா தனக்கு மிகவும் பிடித்தமான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை பெங்களூரை சேர்ந்த தொழிலதிபருக்கு வந்த விலைக்கு விற்று இருப்பதாக செய்தி வெளியாகி அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது. இந்த காரின் ஆரம்ப விலையே 5 கோடி என சொல்கின்றனர். பிரியங்கா சோப்ரா ஆசைப்பட்டு அப்படி வாங்கிய காரை திடீரென்று ஏன் விற்க வேண்டும்? அவருக்கு அப்படி என்ன தேவை வந்தது? என பரபரப்பான பேச்சு கிளம்பியுள்ளது.

இவரின் நெருங்கிய வட்டாரங்கள் காரை விற்றதற்கான காரணமாக கூறியுள்ளதாவது, இவர் தனது கணவருடன் அமெரிக்காவில் வாழ்ந்து வருவதால் இந்த காரேஜிலேயே சும்மா இருப்பதால் அதனை வந்த விலைக்கு விற்று இருப்பதாக கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஹோலி பண்டிகையை இவர் மிகவும் கோலாகலமாகவும் ரொமான்டிக் ஆகவும் தனது கணவருடன் கொண்டாடினார். அப்போது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |