Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“ரொம்ப அடித்து துன்புறுத்தினான்” கர்ப்பிணி பெண்ணின் வெறிச்செயல்…. விழுப்புரத்தில் பரபரப்பு….!!

கணவனை கர்ப்பிணி மனைவி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நாயக்கன் தோப்பு பகுதியில் கட்டிட தொழிலாளியான சந்தோஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சந்தோஷ் ரேகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு அபிநயா என்ற மகளும், வெற்றிவேல் என்ற மகனும் இருக்கின்றனர். தற்போது ரேகா 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சந்தோஷ் ரேகாவின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அவரை அடிக்கடி அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த சந்தோஷை ரேகா கண்டித்ததால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது சந்தோஷ் வீட்டில் இருந்த கத்தியால் ரேகாவை வெட்ட முயற்சி செய்துள்ளார்.

இதனை பார்த்ததும் ரேகா சந்தோஷின் கையில் இருந்த கத்தியை பிடுங்கி அவரது மார்பில் குத்தியுள்ளார். இதனால் சந்தோஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து ரேகா விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் சென்று நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்து விட்டார். அதன்பின் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தோஷின் சடலத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரேகாவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |