Categories
தேசிய செய்திகள்

ரொம்ப அத்துமீறுறீங்க ? இதுலாம் தப்புங்க … பாஜகவுக்கு எதிராக டெல்லி முதல்வர் கருத்து …!!

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திஷா ரவியை கைது செய்ததன் மூலம் ஜனநாயகத்தின் மீது மத்திய அரசு நேரடி தாக்குதல் நடத்தி இருப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில்  போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கிரேட்டா தென் பரட்  உள்ளிட்ட வெளிநாட்டு  பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்தனர். மேலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு சேர்க்கும் வகையில் விண்ணப்பம் ஒன்றை கிரேட்டா தென்பர்  தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த விண்ணப்பத்தை பகிர்ந்ததற்காக  பெங்களூரைச் சேர்ந்த 21வயது சுற்றுச்சூழல் ஆர்வலரான திஷா ரவி உள்ளிட்ட  3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெங்களூருவில் தனது வீட்டில் இருந்த திஷா ரவியை  நேற்று முன்தினம் கைது செய்த காவல்துறையினர் அவரது வழக்கறிஞர் இன்றி டெல்லி அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். திஷாவிற்கு 5 நாட்கள் போலீஸ் காவலில் விதிக்கப்பட்டுள்ளது. திஷா ரவியின் கைதுக்குப் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டெல்லி முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததற்காக 21 வயதே ஆன  திஷா ரவியை கைது செய்திருப்பது  மத்திய அரசு ஜனநாயகத்தின் மீது நடத்திய நேரடி தாக்குதல் எனவும்,  விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது தண்டனைக்குரிய குற்றம் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |