தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் திமுக எம்பிக்கள் வன்முறை அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையாவது,”திருநெல்வேலி வள்ளியூரை அடுத்த காவல்கிணறு அருகே ஓட்டலில் நேற்று இரவு பாஜக நிர்வாகி ஆவரைகுளம் பாஸ்கரன் சாப்பிட்டு கொண்டிருந்தபொழுது தி.மு.க., – எம்.பி., ஞானதிரவியம் அவரை நேரில் சென்று தாக்கியுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த கேமராக்களை அடித்து நொறுக்கி, கேமராவையும் கையோடு எடுத்து சென்றுள்ளார்.
இதனால் வெளியே செல்ல பயந்து, மருத்துவமனைக்கு கூட செல்லாமல் பாஸ்கரன் தன் வீட்டிற்கே சென்றுள்ளார். இந்நிலையில் மாவட்ட தலைவர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் இவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சூழலில் தமிழகத்தில் திமுக எம்பிக்களின் அராஜகம் தலைவிரித்தாடுகிறது. மேலும் தமிழகத்தில் திமுக எம்பிகளின் அராஜகம் தலைவிரித்தாடுகின்றன. திமுகவினர் பிரியாணி கடை முதல் டீக்கடை வரை தமது அட்டூழியம் செய்து வருகின்றனர்.
இக்கட்சியானது தற்பொழுது மட்டுமல்லாமல் எதிர்க்கட்சியாக இருந்த பொழுதும் கூட திமுக வன்முறைக் கலாச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளது. இவ்வாறு திமுக எம்பிக்களின் வன்முறைக் கலாசாரமானது தமிழகத்தின் அமைதியை பாதிக்கும் செயலாகும். இதனால் காவல்துறையினர் அரசியலில் பாரபட்சம் பார்க்காமல் தங்கள் கடமையை சரியாக செய்ய வேண்டும். எனவே சட்டப்படி ஞானதிரவியம் மீது நடவடிக்கை எடுக்காவிடில் பாஜக அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிக்க வேண்டி இருக்கும்”என்று கூறியுள்ளார்.