மதுரையில் ஆடு கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். மேலும் இவர் விவசாய தொழிலை மேற்கொண்டு வருகிறார். இவர் ஆடு வளர்ப்பதில் முழு ஈடுபாடு கொண்டதால், தனது வீட்டிற்கு பின்புறம் தோட்டம் ஒன்றினை அமைத்து அதில் 7 ஆடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர்கள் 2 ஆடுகளை திருடியுள்ளது தெரியவந்தது. இந்நிலையில் மர்ம நபர்கள் இரண்டு ஆடுகளை திருடிச் சென்றதை அறிந்த சத்தியமூர்த்தி அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனையடுத்து பல இடங்களில் ஆடுகளை தேடியும் கிடைக்கவில்லை. இச்சம்பவம் குறித்து சத்தியமூர்த்தி வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அப்புகாரை ஏற்ற சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டார். அந்த விசாரணையில் ஆடுகளை திருடியது பாலமேட்டை சேர்ந்த முருகன் மற்றும் ஐயனார் என்பது தெரியவந்ததையடுத்து காவல்துறையினர்கள் இருவரையும் கைது செய்துள்ளார்கள். மேலும் ஆடுகளைத் திருட பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.