பிரபல ரவுடியை உட்பட இரண்டு பேர் குண்டா தடுப்பு சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையம் கோவிந்தசாமி நகரில் வசித்து வருபவர் ரவுடி மோகன்ராஜ் என்ற சுருட்டையன்(31). இவர் கடந்த 2ஆம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து கிச்சிப்பாளையம் கருவாட்டு பாலம் அருகில் லைன்மேட்டையில் வசித்த தாதாஹயாத் என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ 750 ரூபாயை பறித்து விட்டு தப்பித்து சென்று விட்டார். இது குறித்து கிச்சிபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து ரவுடியான சுருட்டையனை கைது செய்துள்ளனர். இவர் மீது ஏற்கனவே கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது.
இதைபோல் சேலம் மாவட்டம், மிட்டா புதூரில் வசித்து வருபவர் குமரன்(31). இவர் பெரிய புதூரில் வசித்து வந்த ஒரு பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டு கள்ளகாதலாக மாறியது. இதையடுத்து அந்தப் பெண்ணின் கணவரான வெங்கடேசன் என்பவரை கள்ளகாதலியுடன் சேர்ந்து குமரன் கொலை செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் சுருட்டையன், குமரன் இரண்டு பேரும் பொதுமக்களுக்கு தொடர்ந்து இடைஞ்சல் கொடுத்ததால் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர்கள் கிச்சிபாளையம் சீனிவாசன், அழகாபுரம் காந்திமதி ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
இந்த பரிந்துரையின் பேரில் சுருட்டையன், குமரன் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டுள்ளார். மேலும் சுருட்டையன் கடந்த 2017 – 2018 ஆம் வருடங்களில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.