பிரபல நடிகரான தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள “மாறன்” திரைப்படம் OTT-யில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் “பொல்லாத உலகம்” என்ற பாடல் நேற்று முன்தினம் “மாறன்” திரைப்படத்திலிருந்து வெளியானது. இந்த பாடல் தனுஷின் அசாத்திய நடனம் மற்றும் ஜீவி பிரகாஷின் அட்டகாசமான இசை என ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இருப்பினும் தனுஷ் மீது சினிமா வட்டாரத்தில் தற்போது பரபரப்பு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளது. அதாவது நடிகர் தனுஷ் அவர் நடிக்கும் தமிழ் படங்களில் புரோமோஷன்களில் ஈடுபடுவது இல்லையாம். ஆனால் தான் நடிக்கும் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களுக்கு மட்டும் தனுஷ் புரமோஷன் செய்து வருகிறாராம். எனவே தனுஷின் இந்த செயலானது தயாரிப்பாளர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.