எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் குறைந்த வட்டியில் அதிக கடன் கொடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஒருவேளை அவசர பணம் தேவைப்பட்டால் பூர்த்தி செய்து கொள்ள இதுவே நல்ல வாய்ப்பு. இதற்கு எங்கும் அலைய தேவை கிடையாது.அமர்ந்த இடத்தில் வீட்டில் இருந்து கொண்டு சுலபமாக பயன்பெற முடியும். அதற்கு எஸ்பிஐ யோனா ஆப் இருந்தாலே போதும். இதை வைத்து எப்படி கடன் பெறுவது என்பது குறித்து பார்க்கலாம்.
முதலில் ஸ்மார்ட்போனில் SBI யோனா ஆப்பை பதிவிறக்கம் செய்துகொள்ளவும். ஏற்கெனவே இருந்தால் லாகின் செய்யவும். அடுத்ததாக “Avail Now’ என்ற வசதியை கிளிக் செய்து நீங்கள் கடன் வாங்க விரும்பும் தொகை மற்றும் திருப்பிச் செலுத்தும் காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது உங்களுடைய மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பப்படும். அதைப் பதிவிட்டு ‘submit’ கொடுத்தால் கடன் கிடைக்கும்.
நீங்கள் கடன் பெறத் தகுதியுடையவரா என்பதை முன்கூடியே தெரிந்துகொள்ளலாம். அதற்கு 567676 என்ற நம்பருக்கு PAPL space கடைசி நான்கு இலக்க வங்கிக் கணக்கு எண்ணை டைப் செய்து SMS அனுப்ப வேண்டும். உதாரணம்: PAPL 4321.
இதில் நீங்கள் வாங்கும் கடனுக்கான வட்டி 9.60 சதவீதம் முதல் தொடங்குகிறது. பண்டிகை கால சலுகையில் செயல்பாட்டுக் கட்டணத்தில் 100 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. வாரத்தின் ஏழு நாட்களும் இதில் நீங்கள் கடன் பெறலாம். வங்கிக் கிளைக்குச் செல்லத் தேவையில்லை.