பேங்க் ஆப் பரோடா வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான வாய்ப்பை வழங்கியுள்ளது. சொந்தமாக வீடு சொத்து வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். பேங்க் ஆஃப் பரோடா வங்கி ஏப்ரல் 19ஆம் தேதி(இன்று ) மெகா ஏலம் ஒன்றை நடத்துகிறது. இந்த ஏலத்தில் வீடுகள், நிலம் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்கள் விற்பனைக்கு வருகின்றன. சந்தை விலையை காட்டிலும் குறைந்த விலைக்கு இதில் சொத்துக்களை வாங்க முடியும்.
வாங்க நினைப்பவர்கள் தங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ப சொத்துக்களை தேர்வு செய்து கொள்ளலாம். இது ஆன்லைன் மூலமாக நடக்கும் ஏலம் ஆகும். நாடு முழுவதுமாக இந்த ஏலம் நடைபெறுகிறது. யார் வேண்டுமானாலும் இந்த ஏலத்தில் பங்கேற்று கொள்ளலாம். சொத்து உடனடியா.க உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட விடும். வங்கிக் கடனும் எளிய முறையில் பெற்றுக் கொள்ளலாம் இந்த ஏலம் குறித்து அறிந்துகொள்ள https://www.bankofbaroda.in/e-auction என்ற இணையதளத்திற்கு செல்லவும்.