காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் இருப்பதால் ஊழியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று வெளியேறியது. இந்த காட்டு யானை புங்கார் கிராமம் அருகே இருக்கும் நீர்த்தேக்க பகுதியில் சுற்றி திரிகிறது. இதனை பார்த்த பொதுப்பணித்துறை ஊழியர்கள் மற்றும் பவானிசாகர் அணையில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, காட்டு யானைகள் தண்ணீர் தேடி பவானிசாகர் அணை பகுதிக்கு வருகின்றன. அந்த பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. எனவே பொதுப்பணித்துறை ஊழியர்களும், மீனவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.