Categories
தேசிய செய்திகள்

ரொம்ப கவனமா இருக்கணும்…. அடுத்தடுத்து பண்டிகைகள் வருது…. மத்திய அரசு எச்சரிக்கை…!!!

நாடு முழுவதும் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது. பல மாநிலங்களில் பள்ளிகளை திறக்க அனுமதி அளிப்பது போன்ற தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகிறது

மேலும் இந்த ஆகஸ்ட் மாதத்தில் அடுத்தடுத்து பண்டிகை நாட்களும், உள்ளூர் விழாக்களும் வர உள்ளதால் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதற்கு மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், விழாக்காலங்களில் மக்கள் அதிகம் கூட்டம் கூட வாய்ப்பு இருக்கிறது. எனவே அதனை தடுக்கும் விதமாக மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் விதிக்குமாறு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |