Categories
உலக செய்திகள்

ரொம்ப கவனமா இருங்க..! இந்த நிலைமை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்… சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!!

உலக சுகாதார அமைப்பு இந்திய நாட்டிற்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை வேறு எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலை தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் நாட்டில் பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு தற்போது இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலை வேறு எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கொரோனா புதிய அலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் அனைத்து நாடுகளும் கட்டுப்பாடுகளை தளர்த்த கூடாது என்று ஐரோப்பிய நாடுகளுக்கான உலக சுகாதார அமைப்பு தலைவர் ஹன்ஸ் கூறியுள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் மக்கள் கொரோனா தடுப்பூசி குறைவாக செலுத்தப்படும் போது கூட்டங்கள் அதிகமாக கூடுவதை அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு அனுமதி வழங்கினால் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள நிலைமை வேறு எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். எனவே கொரோனா அலை பரவலை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Categories

Tech |