காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய அமமுக செயலாளர் திரு.வி.ஆர் அண்ணாமலை மறைவுக்கு அமமுக மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்ட உள்ள இரங்கல் செய்தியில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.அண்ணாமலை உடல்நிலை குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
Categories