பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கண்டிகுப்பம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படாத காரணத்தினால் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். இதனால் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை.
இதனால் கோபமடைந்த அப்பகுதிமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். அதன் பிறகே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.