நேற்று வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, நான் ஒரு பூத்துக்கு சென்ற போது, 250பெயர் லிஸ்டில் இல்லை. இதுலாம் பாக்க கஷ்டமா இருக்கு. தேர்தல் வர போகுதுனு தேர்தல் ஆணையத்துக்கு தெரியும். அப்படினா எல்லாமே ரெடி பண்ணி இருக்கணும்.
என் வீட்டுலயும் அத்தைக்கு ஓட்டு ஸ்லிப்பே வரல. அதுவும் கஷ்டமா இருக்குங்க . மயிலாப்பூர் தொகுதியில் என் அத்தை ஓட்டு போடணும் . அவங்களுக்கு இன்னும் வரல. ஒவ்வொரு இடத்துக்கு போகும்போது நிறைய பேர் வாக்களிக்க வந்திருக்கிறார்கள் . பெண்கள் நிறைய பேர் வெளியில வந்து வாக்களிக்கிறாங்க, இது ஒரு நல்ல விஷயம் தான்.
நடிகர் விஜயின் வீட்டு பக்கத்துல தான் பூத்து இருக்கு. அதனால் அவரு சைக்கிளில் சென்று வாக்களித்துள்ளார். இதற்க்கு யாரும் எப்படினாலும் பேசலாம். பெட்ரோல், டீசல் விலை உயர்வு எல்லாம் கிடையாது என தெரிவித்தார்.