பூயின் விலங்குகள் சரணாலயத்தில் பிறந்து 32 நாட்களே ஆன ஒட்டகச்சிவிங்கி குட்டியை பொதுமக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.
சிலி நாட்டில் பூயின் என்ற விலங்குகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த விலங்குகள் சரணாலயத்தில் உலக பூமி தினத்தை கொண்டாடும் வகையில் பிறந்து 32 நாட்கே ஆன ஒட்டகச்சிவிங்கி குட்டியை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பிறந்த நாள் முதல் தாயுடன் மட்டுமே இருந்த பெனிட்டா என பெயரிடப்பட்டுள்ள ஒட்டகச்சிவிங்கி குட்டி நேற்றுதான் அதன் தந்தை க்ரூகர் மற்றும் சகோதரி கெமாவுடன் சேர்ந்தது.
மேலும் இந்த விலங்குகள் சரணாலயத்திற்கு வருகை தந்த குழந்தைகளும் பெரியவர்களும் பெனிட்டாவை ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.