Categories
அரசியல் தமிழ் சினிமா

ரொம்ப சந்தோசமா இருக்கு…! சூர்யாவுக்கு ஆதரவு…. நெகிழ்ந்து போன பிரபல நடிகர் …!!

பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் நரேன் சூர்யாவுக்கு குரல் கொடுத்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

சூர்யா நடித்து OTT-யில் வெளியான ஜெய் பீம் படம் தமிழ் மாதிரியே மலையாளத்திலும் நன்றாகவே ரீச் ஆகியிருக்கிறது. மலையாளத்தில் சூர்யாவுக்கு நரேன் டப்பிங் வாய்ஸ் பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய நரேன், சூரரைப்போற்று படத்திற்கும் நான்தான் சூர்யாவிற்கு டப்பிங் வாய்ஸ் பேசினேன். அதுவும் மிகப்பெரிய சூர்யா சார் வாய்ஸ் கொடுக்கிறது என்றால் சும்மாவா என்று கூறியுள்ளார்.

ஜெய்பீம் படத்துக்கு டப்பிங் பேசுவதற்கு கூப்பிட்டபோது கொஞ்சம் கூட யோசிக்கவே இல்ல. உடனே ஒத்துக் கொண்டேன். ஆனால் நான் நினைத்த மாதிரி படம் இல்லை. எனக்கு சேலஜிங்கா படம் இருந்தது. சூர்யா சாரின் நடிப்பு, டயலாக் டெலிவரி என்று மைநியூட் ஆக கவனித்து பிரேம் பை பிரேம் பார்த்து பேசியது ஒரு புதிய எக்ஸ்பீரியன்ஸ் ஆக இருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த எக்ஸ்பீரியன்ஸ் சினிமாவில் மேலும் ஒரு படி கற்றுக் கொள்வதற்கு ஒரு ஸ்டெப்பிங்ஸ்டோனாக அமைந்துள்ளது. மலையாளத்திலும் படத்தில் நல்ல ரீச் கிடைத்துள்ளது.

Categories

Tech |