Categories
தேசிய செய்திகள்

ரொம்ப சந்தோசமா இருக்கு…! நம்ம உறவு சூப்பரா இருக்கு… குஷியான பிரதமர் மோடி …!!

இந்தியா வந்த ரஷியா அதிபர் புதினிடம் பேசிய பிரதமர் மோடி, கொரோனா காலத்திலும் இரண்டு நாடுகளுடைய முழு ஒத்துழைப்பும் கிடைத்துக் கொண்டிருந்தது. கடந்த 20 வருடங்களாக என்ன முயற்சி எடுக்கப்பட்டதோ, என்ன வளர்ச்சி நடந்ததோ அதற்கு உங்களுடைய முழு ஒத்துழைப்பு கிடைத்ததற்காக நான் என்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த பல வருடங்களாக உலக அளவில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு நிலையை கூட இந்தியா மற்றும் ரஷ்யா இடையே உள்ள உறவு நன்றாக நீடித்திருந்தது.

இது இரண்டு நாடுகளுக்கும் உள்ள ஒரு மிக உயர்ந்த உடன்படிக்கை, உயர்ந்த உறவு. இன்று இந்த விஷயம் சம்பந்தமாக பாதுகாப்பு துறை அமைச்சகத்தோடு விவாதிக்கப்பட்டது,அந்த அமைச்சரோடும் இதை பற்றி விவாதம் நடந்தது. இதில் வெளியுறவுத் துறை அமைச்சரும் பங்கு பெற்றிருந்தார். வரும் காலங்களில் இரண்டு நாடுகளும் நல்ல நட்புறவை கடைபிடிக்க வேண்டும், இரண்டு நாடுகளுக்கும் இடையே நல்ல நட்பு உறவு நீடிக்க வேண்டும், பொருளாதார ரீதியாக கூட நம் இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால நட்பு நீடிக்க வேண்டும். இதற்கு அடிப்படையாக பல முதலீடுகள் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட வேண்டும், இதற்கு உங்களுடைய வழிகாட்டுதலும் வேண்டும்.

பல கூட்டங்களில் இதற்கு உண்டான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இதன் மூலமாக எங்களுடைய பொருளாதார வளர்ச்சி உயர்ந்து கொண்டிருகிறது. இரண்டாவதாகவும் இது பற்றிய ஒப்புதல் கிடைத்தது மிகவும் சந்தோசமான விஷயம். இன்றைய கூட்டத்தில் நாம் இதை பற்றிய விவாதத்தை நடத்த சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. மறுபடியும் இந்தியா சார்பாக உங்களை நான் வரவேற்கிறேன், உங்களுடைய கடுமையான பணிக்கு இடையே நீங்கள் இந்தியா வர சம்மதித்ததற்கு நான் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதன் மூலமாக நம் இரண்டு நாடுகளுக்கும் இடையே ஏற்படும் உறவு மிகவும் நீடிக்கும் என மோடி தெரிவித்தார்.

Categories

Tech |