Categories
மாநில செய்திகள்

“ரொம்ப சந்தோஷமா இருக்கு”… ஒரு ரூபாய் இட்லி பாட்டியை கௌரவித்த முதல்வர் ஸ்டாலின்… நெகிழ்ச்சியில் கமலாத்தாள் பாட்டி…!!!!!

கோவை ஆலந்துறை அடுத்த வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த கமலாத்தாள் என்பவர் வசித்து வருகிறார். 85 வயதான இவர் கடந்த 30 வருடங்களாக தனி ஆளாக இட்லி வியாபாரம் செய்து வருகின்றார். இவர் ஒரு ரூபாய் இட்லி பாட்டி என அங்கு உள்ளவர்களால் அழைக்கப்படுகின்றார் 25 பைசாவுக்கு இட்லி விற்பனை செய்ய தொடங்கிய இவர் விலைவாசி உயர்வு காரணமாக இன்று ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து கொண்டிருக்கிறார். ஓட்டல்களில் ஒரு இட்லி பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்ற சூழலில் ஏழை எளிய மக்கள் பசியாற வேண்டும் எனும் நோக்கத்தில் கமலாத்தாள் பாட்டி ஒரு ரூபாய்க்கு இட்லியும் சாம்பார், சட்னி போன்றவற்றை தனது கையால் சமைத்து விற்பனை செய்து வருகின்றார்.

இட்லி பாட்டி என்று சமூக ஊடகத்தில் மிகவும் வைரலாக மாறிய கமலத்தாள் பாட்டிக்கு தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது சொந்த செலவில் வீடு கட்டி தந்துள்ளார். இந்த சூழலில் மதுரையில் நடைபெற்ற பள்ளிகளில் காலை சிற்றுண்டி தொடக்க விழாவில் கோவையில் 30 வருடங்களுக்கு மேலாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டியை முதல்வர் ஸ்டாலின் கௌரவித்துள்ளார். ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளுக்கு ஒரு நூற்றாண்டின் கல்விப் புரட்சி என்னும் ஆவண புத்தகத்தின் முதல் பிரதியை முதல்வர் ஸ்டாலின் வழங்கி அவரை நெகிழ்ச்சிப்படுத்தி உள்ளார். மேலும் இது பற்றி இட்லி பாட்டி கமலாதாள் பேசும்போது, ரொம்ப சந்தோஷமா பூரிப்பாய் இருக்கு மேலும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் ரொம்ப நல்ல திட்டம் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |