‘தளபதி 65’ படத்தை இயக்கும் நெல்சன் திலீப்குமாருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜயின் 65வது திரைப்படம் குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதில் தளபதி 65 படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குவதாகவும், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதை விஜய் ரசிகர்கள் உற்சாகத்துடன் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர் .
Extremely happy for you Nelson na🤗🤗my brother with big dreams joining big names👏👏👍😊😊Best wishes to @actorvijay sir, @sunpictures and my dear @anirudhofficial 🙏🙏🙏 https://t.co/3dFDCbppqM
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) December 10, 2020
இந்நிலையில் நடிகரும், நெல்சனின் நண்பருமான சிவகார்த்திகேயன் முதல் ஆளாக வாழ்த்து டிவிட் போட்டுள்ளார். அதில் ‘ரொம்ப சந்தோசம் நெல்சன் அண்ணா. உங்களுடைய மிகப்பெரிய கனவு நனவாகியுள்ளது . படக்குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.