மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆர். எஸ் மாத்தூர் கிராமத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயராமன் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் ஆசைகளை தூண்டுவது, பாலியல் தொடர்பான வார்த்தைகளை பேசுவது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ் ஜெயம்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெயராமனை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.