ஸ்வீடனில் கொரோனாவை ஒழிப்பதற்காக போடப்பட்ட புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தலைநகர் உட்பட பல முக்கிய பகுதிகளில் பொது மக்கள் வீதியிலிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஸ்வீடனில் கொரோனாவை ஒழிப்பதற்காக பல புதிய கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது.
அதன்படி கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டதற்கான பாஸ்போர்ட் மற்றும் கட்டாயமாக முககவசம் அணிதல், பொது நிகழ்ச்சிகளில் குறைவான மக்கள் கலந்து கொள்ளுதல் போன்ற புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சுவீடனின் தலைநகர் உட்பட பல முக்கிய பகுதிகளில் பொது மக்கள் வீதியிலிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.