மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைக்கான சான்று வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.