ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சட்டப் பேரவையில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சட்ட வல்லுனர்களின் ஆலோசனை பெற்று திரும்பப் பெறப்படும் என்று கூறினார். கடந்த 2013ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழ்நாட்டில் பல்வேறு பல்வேறு பகுதியில் போராட்டங்கள் நடைபெற்றன. ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழ்நாட்டு உரிமையை நிலைநாட்ட நடத்தப்பட்ட உணர்வுபூர்வமான போராட்டம்.
இந்த போராட்டத்தின்போது பதியப்பட்ட வழக்குகளில் பலர் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவே போராடினர். இந்த போராட்டங்களின் போது சட்டம் ஒழுங்கினை பராமரித்திட பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. எனினும் சில விரும்பத்தகாத சம்பவங்கள் இந்த போராட்டங்களின் போது நடைபெற்றது.
இந்த வழக்குகளால் உணர்வுபூர்வமான போராடிய மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கருத்தில் கொண்டு இந்தப் போராட்டங்களின் போது பதியப்பட்ட வழக்குகளை… காவலர்களை தாக்கியது, தீ வைப்பு போன்ற சட்டபூர்வமாக திரும்பப் பெறமுடியாத வழக்குகளை தவிர மற்ற வழக்குகளை சட்ட வல்லுநர்கள் ஆலோசனை பெற்று எனது தலைமையிலான தமிழக அரசு திரும்பப் பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்பு இந்த வழக்குகளால் பாதிக்கப்பட்ட பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டக்குழு தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் பல அற்புதமான முடிவுகளை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.