தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், கூடலூர், கோம்பை, பண்ணைபுரம், உத்தமபாளையம் பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த குடிநீர் விநியோகத்திற்காக லோயர்கேம்பிள் குடிநீரேற்ற நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் கீழ்ப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கம்பம் நகருக்கு செல்லும் வழியில் உள்ள கூட்டு குடிநீர் திட்ட குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்பு தற்போது வரை சரி செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் வீணாகி செல்கிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக இதில் தலையிட்டு குடிநீர் வீணாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.