சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பி.எஸ்.என்.எல் ஊழியர் கடன் நெருக்கடியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பதினெட்டாம்படி நகரில் சேரன் (54) என்பவர் வசித்து வந்தார். இவர் போன் மெக்கானிக்காக பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். இவர் சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றார். மேலும் பணியில் இருந்த காலத்தில் இவர் அதிக அளவில் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை தற்போது திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் நெருக்கடிக்கு ஆளானார். மேலும் இந்த நெருக்கடியால் மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று அவர் வீட்டிற்கு அருகே உள்ள கழிவறையில் வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை குறித்து காரைக்குடி அழகாபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.