கோவிலுக்குள் புகுந்த நாகப்பாம்பை பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சேத்துநாம்பாளையம் பகுதியில் பழமையான பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வர். இந்த கோவிலில் பெரியசாமி என்பவர் பூசாரியாக இருக்கிறார். இந்நிலையில் காலை 8 மணி அளவில் பெரியசாமி பூஜை செய்வதற்காக கோவிலுக்கு சென்றபோது சாமி சிலைக்கு கீழே இருக்கும் படிக்கட்டில் நாகப்பாம்பு ஒன்று கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அறிந்த ஏராளமான பொதுமக்கள் கோவிலில் திரண்டு தூரத்தில் நின்றபடி தரிசனம் செய்தனர். இரவு நேரம் வரை நாகப்பாம்பு அங்கேயே இருந்ததால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.