Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ரொம்ப நேரமா வெளிய வரலன்னு பார்த்தா இப்படி நடந்திருக்கு…. முதியவருக்கு நேர்ந்த சோகம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் மர்ம நபர்கள் முதியவரது கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் நிலத்தரகரான வரதன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இவருக்கு சொந்தமானதாக நிலம் மற்றும் வீடு இருக்கிறது. இதற்கிடையே வரதன் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். இருப்பினும் அவர் சத்தம் கொடுக்கவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கதவை திறந்துள்ளனர். அப்போது அவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக இறந்துகிடந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |