பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் சரவணன் விக்ரமின் தங்கை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவண விக்ரம், வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தற்போது இந்த சீரியலில் அம்மா கேரக்டரில் நடித்து வந்த ஷீலா இறந்ததாக காட்டப்பட்ட நிலையில், இறந்துபோன தனது தாயின் முகத்தை கடைசி வரை பார்க்க முடியாமல் கண்ணன் துடிக்கிறான். ஐஸ்வர்யா, கண்ணன் இருவரும் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால், குடும்பத்தினர் அவர்களை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார்கள். இதனால் கண்ணனால் அவனது தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்காக நிஜத்திலேயே கண்ணன் மொட்டை அடித்துள்ளார். இதுகுறித்து கண்ணனாக நடித்து வரும் சரவண விக்ரமின் தங்கை தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘உனது நடிப்பு உனது டெடிகேஷனை பலரும் பாராட்டி வருகிறார்கள். உனக்கு தங்கையாக இருப்பதில் ரொம்ப பெருமையாக இருக்கிறது. இதெல்லாம் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போது நான் எவ்வளவு உயரத்தில் இருக்கிறேன் என்பதை என்னால் சொல்லவே முடியாது’ என பதிவிட்டுள்ளார் .