Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரொம்ப ரொம்ப ஆசைப்பட்டேன்… என்னால முடியாம போய்டுச்சு…. யுவராஜ் சிங் ஓபன் டாக் …!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தனது நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடியதில் பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் மற்றும் மேட்ச் வின்னராக உள்ள முன்னாள் வீரர் யுவராஜ் சிங், கடந்த 2000 வருடம் முதல் 2011 வரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி அவர் கூறுகையில், “இந்தியாவுக்காக நான் அதிக அளவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்பினேன். இருந்தாலும் அந்த நாட்களில் அணியில் எனக்கான இடம் கிடைப்பது என்பது பெரும் சவாலாகவே இருந்தது.

சச்சின் டிராவிட்,சேவாக், விவிஎஸ் லக்ஷ்மன், கங்குலி இவர்கள் மாதிரியான ஜாம்பவான் இடம்பெற்றுள்ள அணியில் எனக்கான இடம் கிடைப்பது என்பது கடினம். அப்போது எனக்கு ஒன்று அல்லது இரண்டு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைக்கும். இருந்தாலும் கங்குலியின் ஓய்வுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் விளையாட எனக்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் துர்திஸ்டவசமாக கிடைத்த வாய்ப்பு அனைத்தும் புற்றுநோயால் திசை மாறிப் போய் விட்டது. இருந்தாலும் என் நாட்டிற்காக நான் கிரிக்கெட் விளையாடியதில் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று அவர் பெருமிதத்தோடு கூறியுள்ளார். யுவராஜ் இந்தியாவுக்காக 40 டெஸ்ட் 304 ஒருநாள் மற்றும் 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |