580 ஆண்டுகளுக்கு பின் மிக நீண்ட சந்திர கிரகணம் வரும் 19ஆம் தேதி நிகழ்கிறது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அந்த அரிய நிகழ்வு தெரியாது என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். அப்போது நிலவின் மீது விழக்கூடிய சூரியனின் ஒளியை பூமி முழுமையாக மறைத்தால் அது முழு சந்திர கிரகணம் பகுதி அளவு மறைத்தால் அது பகுதி சந்திரகிரகணம் என அழைக்கப்படுகிறது.
இந்த நிலையில் மிக நீண்ட நேரம் பகுதி அளவு சந்திரகிரகணம் வரும் 19ஆம் தேதி மதியம் 12:48 மணிக்கு தொடங்கி 4:17 மணி வரை நிகழ உள்ளது. இதற்கு முன் இதுபோன்ற நீண்ட பகுதியளவு சந்திர கிரகணம் கடந்த 1480 ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி நிகழ்ந்ததாகவும், அடுத்து இது போன்ற நிகழ்வு 2,669 ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி நிகழும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வானியல் அதிசயம் வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் தெளிவாக தெரியும் என்றும், இந்தியாவைப் பொருத்தவரை அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாமின் வடகிழக்கு பகுதிகளில் கிரகணம் மிக குறுகிய நேரத்திற்கு தெரியும் என்றும், அதுவும் சந்திர உதயத்திற்கு பிறகுதான் தெரியும் என்றும், ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.