உள்ளாட்சி தேர்தலில் புதுச்சேரி மக்கள் சரியான விடை அளிப்பார்கள் என ஜோதிமணி எம்.பி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, புதுவையில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்ததற்கும் இன்றைக்கும் வேறுபாடு ரொம்ப பாக்க முடியுது. நிறைய மக்கள் சொல்கிறார்கள் 5 மாதம் தான் ஆகிறது தேர்தல் முடிந்து ஆனால் காங்கிரஸ் பதவியில் இருந்தால் நமக்கு இந்த நிலைமை வந்திருக்காது என்று நினைக்கின்ற அளவிற்கு இன்றைக்கு பாண்டிச்சேரி மக்கள் ஒரு துயரத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது.
குறிப்பாக பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் தமிழ்நாட்டில் இருக்கின்ற ஏழை எளிய மக்களுக்கு பயன்பட கூடியதாக இருந்தது. இன்றைக்கு மருத்துவ செலவு சாதாரண நடுத்தர குடும்பத்திற்கு கூட ரொம்ப அதிகம் வருகிறது.
என்னுடைய நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்து ஏராளமானவர்களுக்கு ஜிப்மர் மருத்துவமனைக்கு கடிதம் கொடுத்து அனுப்பிவிட்டு ஜிப்மர் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டால்…. ரொம்ப வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கிறவங்களுக்கு மட்டும் தான் நாங்கள் வைத்தியம் செய்வோம், மத்த யாருக்கும் பார்க்க மாட்டோம் என்று சொல்கிறார்கள். இந்த மாதிரியான பல அநீதிகள் புதுச்சேரி மக்கள் மீதும், அருகில் இருக்கின்ற தமிழ்நாட்டு மக்களின் மீதும் பிஜேபி நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் உள்ளாட்சி தேர்தலில் புதுச்சேரி மக்கள் சரியான விடை அளிப்பார்கள். காங்கிரஸ் கட்சி கூட்டணி வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. காரைக்காலை பொறுத்தவரையில் நாங்கள் ஏற்கனவே கூட்டம் எல்லாம் முடித்து விட்டோம். முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் ஒரு கமிட்டி போட்டிருக்காங்க, காரைக்கால் முழுவதுமாக சேர்த்து, …
காரைக்கால் நகராட்சி தனி கமிட்டி, பஞ்சாயத்திற்கு தனி கமிட்டி, தொகுதிக்கு தனி கமிட்டி போட்டிருக்காங்க. காரைக்காலை பொறுத்தவரையில் வேட்புமனுக்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சி வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் 6ஆம் தேதிக்குள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.