தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை எல்லி அவ்ரம் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர் நடிகர் தனுஷுக்கு மனைவியாக படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை எல்லி அவ்ரம் நடிகர் தனுஷ் உடன் சேர்ந்து நடித்த அனுபவம் குறித்து கூறியுள்ளார். அதாவது நானே வருவேன் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் நான் சேர்ந்து நடித்துள்ளேன்.
எங்களுடைய கெமிஸ்ட்ரி குறித்து படம் வெளியாவதற்கு முன்பாகவே நல்ல கருத்துக்கள் வருகிறது. எங்களுடைய கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று கூறியுள்ளார். நடிகை எல்லி பார்ப்பதற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போன்று இருப்பதால், ஐஸ்வர்யா மற்றும் தனுஷின் கதையை தான் படமாக எடுத்துள்ளார்களா என்ற சந்தேகம் வருவதாக ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும் 35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நானே வருவேன் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமை 18 கோடிக்கும், டிஜிட்டல் உரிமை 25 கோடி ரூபாய்க்கும் விற்பனையானதாக தகவல் வெளியாகியுள்ளது.