ஆசிய கோப்பை கிரிக்கெட்போட்டி இன்னும் 2 வாரங்களுக்குள் துவங்க இருக்கிறது. இந்த ஆசிய கோப்பை போட்டியானது இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் போன்ற அணிகளுக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும். ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கு இத்தொடர் முக்கியமானதாக இருக்கும். இந்திய கிரிக்கெட் அணி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 28ஆம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் குரூப் ஏ போட்டியில் மோதுகிறது.
இறுதியாக இருஅணிகளும் நேருக்குநேர் மோதிய 2021 டி20 உலகக் கோப்பையில் பாபர்அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தியது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனாக விராட்கோலி இருந்தார். எனினும் இப்போது ரோகித்சர்மா தலைமை வகிக்கிறார். இதில் ரோகித்சர்மா தொடக்க வீரர் மற்றும் கேப்டனாக சிறப்பாக செயல்படுகிறார். அத்துடன் காயத்திலிருந்து மீண்டும் அணிக்கு திரும்பிய கே.எல் ராகுல் அவருடன் தொடக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்பு இருக்கும் சூழ்நிலையில், ரோகித் சர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் விளையாடலாம் என பாகிஸ்தானின் முன்னாள்வீரர் தினேஷ் கனேரியா விருப்பம் தெரிவித்து இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது, ரோகித் சர்மாவுடன், சூர்யகுமார் யாதவ் தொடக்கஆட்டக்காரராக தொடர விரும்புகிறேன். தொடக்க ஆட்டக்காரராக ரோகித்துடன் நிலைத்துநின்று சிறப்பாக ஆடுகிறார். கேஎல் ராகுல் மீண்டுமாக அணிக்கு திரும்புகிறார். அவர் கீழ்வரிசையில் ஆடவேண்டும் என நான் விரும்புகிறேன். அவர் வெவ்வேறு சூழ்நிலைகளில் பேட்டிங் செய்திருக்கிறார் மற்றும் அவர் அனைத்து சூழ்நிலைகளிலும் ரன்களை குவித்துள்ளார். ஆகவே கேஎல் ராகுலுக்கு பதில் சூர்யகுமார் யாதவ் ரோகித்துடன் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடினால் அணிக்கு பலம் சேர்க்கும் என்று அவர் கூறினார்.