ரோஜா சீரியலில் நடிகை ஐஸ்வர்யா மீண்டும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியல் தொடர்ந்து டி.ஆர்.பி யில் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் பிரியங்கா நல்காரி கதாநாயகியாகவும், சிப்பு சூரியன் கதாநாயகனாகவும் நடித்து வருகின்றனர். தற்போது இந்த சீரியல் மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது .
இந்நிலையில் இதற்கு முன் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ஐஸ்வர்யா தற்போது மீண்டும் இந்த சீரியலில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ‘ரோஜா’ சீரியலில் விறுவிறுப்பு இன்னும் அதிகமாகும் என ரசிகர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.