சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரோஜா. இது TRP-யிலும் தொடர்ந்து டாப் இடத்தில் இருந்து வருகிறது. பிரியங்கா என்பவர் நாயகியாக நடித்துவரும் இந்த சீரியலில், நாயகனாக சிப்பு சூர்யன் நடித்து வருகிறார். இந்த சீரியலில் முதல் முதலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிகை ஷாமிலி குமார் நடித்துவந்தார். இந்நிலையில் இவர் கர்ப்பமாக இருந்ததால் இவருக்கு பதில் விஜே அக்ஷயா வில்லியாக நடிக்க வந்தார்.
சில மாதங்கள் இந்த கதாபாத்திரத்தில் நடித்துவந்த விஜே அக்ஷயா கர்ப்பமான காரணத்தினால் சீரியலிலிருந்து வெளியேறினார். இந்த நிலையில் இப்போது விஜே அக்ஷயாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை விஜே அக்ஷயாவே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். இதனால் நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.