Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரோஜா பூங்காவில் ஜெயலலிதா பெயர் அகற்றம் …!!

நீலகிரி மாவட்டம் உதகை ரோஜா பூங்காவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் பெயர் பலகை அகற்றப் பட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உதகை தாவரவியல் பூங்காவில் 1995- இல் நடைபெற்ற 100-வது மலர் கண்காட்சி கொண்டாடப்பட்டது. அப்போது அதன் நினைவாக உதகை ரோஜா பூங்கா ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவில் தற்போது 28,000 ரோஜா செடிகளில் 4,000 ரகங்களில் ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

இந்த ரோஜா பூங்காவில் ரிசன்ட் ரெட் ரோஜா ரகத்திற்கு ஜெயலலிதா என பெயர் சூட்டப்பட்டது. மேலும் அஸ்வின், தாஜ்மஹால், ஜெனிபர், சார்லிபோல், நாகபெல்லி உள்ளிட்ட பல்வேறு ரகங்களுக்கு பெயர் சூட்டப்பட்டது. தற்போது 4,000 ரோஜா ரகங்கள் பூங்காவை அழகுபடுத்துகின்றன.

இதனிடையே ரோஜா பூங்காவின் பெயர் பலகை அகற்றப்பட்டதால், அதிமுக தொண்டர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர் பெயர்ப்பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளதற்கு தோட்டக் கலைத் துறையினருக்கு அதிமுகவினர் நன்றி தெரிவித்தனர்.

Categories

Tech |