சாலைகளில் கால்நடைகள் சுற்றினால் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி பகுதியில் தெருக்கள் மற்றும் சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் ரூபாய் 10,000 அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.. அதாவது, சுற்றித்திரியும் மாடுகளை பிடுத்து செல்வதுடன் முதல் முறையாக 10,000 அபராதம் விதிக்கப்படும். 3 நாளில் அபராதம் செலுத்தி கால்நடைகளை உரிமையாளர்கள் திரும்பப் பெறவில்லை என்றால் மாநகராட்சி அருகில் உள்ள கால்நடை சந்தையில் கால்நடைகள் விற்பனை செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்..
மேலும் கால்நடைகளை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தப்படும் என்றும், கால்நடைகளை உரிமையாளர்கள் தங்கள் வளாகத்திலேயே கட்டிவைத்து சுகாதார முறையில் வளர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்..
தெருக்கள், சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொது மக்களுக்கும் பொது சுகாதாரத்திற்கும் சீர்கேடு ஏற்படுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.